அரசுப் பேருந்து கட்டண உயர்த்தப்படுமா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
அரசுப் பேருந்துகளை குறைந்த கட்டணத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.
அரசு போக்குவரத்து கழக முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செயற்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை ஊழியர்களுடன், சிறப்பு விருந்தினராக அமைச்சர் சிவசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், " கூட்டத்தில் தொழிலாளர்களின் நலனுக்கான முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தினர். மகளிருக்கான இலவச பேருந்தில் பணியாற்றும் ஊழியர்கள், மழை காலத்தில் பணியாற்றிய , கொரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கும் நிலுவை தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படியாக ஊதிய உயர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது.
ஒன்றிய அரசு பொதுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைத்து வருகிறது. தமிழகத்தில் பல நெருக்கடி சூழ்நிலை இருந்தாலும், போக்குவரத்து துறையில் உள்ள சிக்கல்களை / கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு பிறகு பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. சென்னையில் 69 சதவீதம் பெண்கள் போக்குவரத்து இருப்பதாகவும், இந்த மகளிருக்கு இலவச பேருந்து என்பது லாபம் தரும் செயல்பாடாக இருக்கிறது. தானியங்கி டிக்கெட் முறை சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மண்டலங்களில் தற்போது கொண்டு வந்துள்ளோம்.
இதேபோல் விரைவில் மற்ற மண்டலங்களிலும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மகளிர் பேருந்துகளில் முன்புறமும், பின்புறமும் மட்டும் வண்ணம் அடிப்பது குறித்து, ஏற்கனவே தெரிவித்தது போல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அரசு பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனர் காலிப் பணியிடங்கள் நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்னி பேருந்துகள் கட்டண நிர்ணயம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் மீண்டும் அவர்களுடன் இது தொடர்பாக பேச இருக்கிறோம். அரசு பேருந்தை குறைந்த கட்டணத்தில் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொது மக்கள் அரசு பேருந்தை பயன்படுத்தினால் குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம்.
மேலும் படிக்க | ஓபிஎஸ்ஸின் சித்துவிளையாட்டில் ஜெயலலிதாவே தப்பவில்லை - ஆர்.பி. உதயகுமார்
மேலும் படிக்க | குடிநீர் குழாய் உடைந்து பள்ளிக்குள் தண்ணீர் புகுந்ததால் பள்ளி பூட்டப்பட்ட அவலம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ