ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக அதிகமான குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் அவரது உறவினர் களின் வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் நடந்த வருமானவரி சோதனையில், ரூ.4.5 கோடி ரொக்கம் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் கிடைத்தது.


தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை நடந்த போது, நாமக்கலில் உள்ள கான்ட்ராக்டர் சுப்ரமணியன் வீட்டிலும் சோதனை நடந்தது.


இவர், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி கட்டட கான்ட்ராக்டர் ஆவர். இந்நிலையில் இவர், இன்று தனது தோட்டத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.