பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 9 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 4 இணையமைச்சர்களுக்கு கேபினட் அந்தஸ்து உயர்த்தப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன்படி பல்வேறு அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றியமைக்கப்பட்டது. 


இதில் தமிழகத்தை சேர்ந்த 2 பேருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. பாதுகாப்பு துறை நிர்மலா சீதாராமனுக்கும், கப்பல்போக்குவரத்து துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நிதித்துறை இணை அமைச்சராக கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.