முதலமைச்சர்கள் கொடி ஏற்றும் வாய்ப்பை பெற்றுத் தந்தவர் கலைஞர்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் முதல்முறையாக சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் 75- வது சுதந்திரதினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் முதல்முறையாக சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
அதன் பின் பேசிய அவர், "நாட்டின் சுதந்திர தினத்தன்று இந்தியா முழுவதும் உள்ள முதலமைச்சர்கள் கொடி ஏற்றும் வாய்ப்பை, உரிமையை பெற்றுத் தந்தவர் கலைஞர். 75வது சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் தமிழக அரசால் மிகப்பெரிய நினைவுத்தூண் உருவாக்கப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை ரூபாய் 17 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதிய தொகை 700 ரூபாயில் இருந்து 8 ஆயிரத்து 500 லிருந்து 9 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்" எனக் கூறினார்.
“மேலும் கொரோனா (Coronavirus) நெருக்கடி காலத்தில் அரசின் முயற்சிகளுக்கு அடித்தளமாக இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள், அரசு இயந்திர அலுவலகர்கள் அனைவரையும் பாராட்ட கடமைபட்டுள்ளேன். தமிழ்நாடு முதலமைச்சராக நான் பொறுப்பு ஏற்றதில் இருந்து 101வது நாள் இன்று. நிதிச்சுமையோடு, கொரோனா நெருக்கடியும் இருந்த கால சூழலில் பதவியேற்று பல்வேறு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அதில் வெற்றியும் கண்டு இருக்கின்றோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
ALSO READ: 75வது சுதந்திர தினம்- தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
“காந்தி குறித்த அரிய கலைப் பொருட்களை கொண்ட மதுரை காந்தி அருங்காட்சியகம் பொதுமக்களையும் இளைய தலைமுறையினரையும் ஈர்க்கும் வகையில் 6 கோடி ரூபாய் செலவில் நவீன முறையில் புதுப்பிக்கப்படும். சாதி, மதம், இனம் குறித்த பல்வேறு சவால்களை எதிர் கொண்டிருக்கும் இந்திய திரு நாட்டை வழிநடத்த காந்திய சிந்தனைகள் எனும் கருத்தை இளைஞர் மனதில் ஆழப் பதிய வைக்க சூளுரைப்போம்" என்றும் முதல்வர் ஸ்டாலின் (MK Stalin) மேலும் தெரிவித்தார்.
ALSO READ: 75-ஆவது சுதந்திர தினம்: முதல்முறையாக கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் மு.க.ஸ்டாலின்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR