குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டு வாசலில் கோலம் வரையப்பட்டு வாசகம் எழுதப்பட்டிருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து  வருகிறது. வடகிழக்கு மாநிலங்கள், குறிப்பாக அசாம், டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் இதுவரை இந்தச் சட்டம் மீது வன்முறை சீற்றத்தைக் கண்டுள்ளன. முன்னதாக இந்த சட்டத்தை எதிர்த்து ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் காவல்துறையினருடன் மோதல் நடத்தியதில், இரு தரப்பு மக்களும் காயமடைந்ததை அடுத்து டெல்லியில் நடந்த போராட்டம் கசப்பாக மாறியது. 


இந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள், இடதுசாரி மாணவ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் வன்முறையாகவும் பல இடங்களில் வெடித்தது. இதனால் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். வன்முறை சம்பவங்களில் பலர் பலியாகினர்.


அந்தவகையில் நேற்று சென்னை பெசன்ட்நகர் பகுதியில் மாணவியர் சிலர் கோலம் வரைந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 
கோலம் வரைந்த இந்த 7 காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டு, ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.


இந்நிலையில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீடு, ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடு மற்றும் சிஐடி நகரில் உள்ள திமுக எம்பி கனிமொழியின் வீட்டு வாசலில் இன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் வரையப்பட்டிருந்தது. 


 



 


 


கோலம் வரைந்து, அதன் அருகில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு வேண்டாம் என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தன. 



மேலும் உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.