அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள் - மு.க.ஸ்டாலின்
மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா வந்திருப்பது மனவேதனை தருகிறது என மு.க.ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்!!
மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா வந்திருப்பது மனவேதனை தருகிறது என மு.க.ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்!!
அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல் அரசே இலவச உணவுகள் வழங்க வேண்டும் என திமுக தலைவர் முக. ஸ்டாலின் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்த அவரது ட்விட்டர் பதிவில்.... அம்மா உணவகங்களில் இலவச உணவு; தூய்மைப் பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம்; பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்து செய்திகளை மின்னஞ்சலில் அனுப்புதல்;மின் கட்டண ரத்து & சுங்கச் சாவடி வசூல் நிறுத்தம் ஆகியவற்றை மத்திய-மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். மக்களின் துயர் துடைப்பதே தலையாய கடமை!" என அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
"அத்துடன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... தொடர் ஊரடங்கு காரணமாக ஏழை எளிய மக்கள் தங்களின் ஒரு வேலை உணவுக்கு கூட நாள் தோறும் போராடி வருகின்றனர்.
அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல் அரசே இலவச உணவு வழங்க வேண்டும். அம்மா உணவகங்களை அதிமுகவினருக்கு மட்டும் குத்தகைக்கு விட்டதுபோல் தாரை வார்ப்பது சரியல்ல. ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்மா உணவகங்களை அதிமுகவினரின் கைகளில் தந்தது மோசமான அரசியல். தூய்மைப்பணியாளர்களுக்கு உரிய ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். சுங்கச்சாவடிகளை திறந்து சுங்கக் கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பது மனிதநேயமற்ற செயல். சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு உடனே நிறுத்தி வைக்க வேண்டும்.
பத்திரிகையாளர்களுக்கு போர்க்கால அடிப்படையில் கொரோன சோதனை செய்ய வேண்டும். செய்திகளை ஊடகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புவது மிகமுக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகும். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பத்திரிகையாளர் பலருக்கு கொரோனா வந்திருப்பது மனவேதனை தருகிறது. அரசு உள்ளிட்ட அனைவருமே ஊரடங்கு முடியும் வரை பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்ய வேண்டும். ரேஷனில் அரிசி கார்டு வைத்துள்ளவர்களுக்கு மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.