சமையல் எரிவாயு மானியத்தை அடுத்த ஆண்டு முதல் ரத்து செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. மேலும் சமையல் எரிவாயுவின் விலை மாதந்தோறும் ரூ.4 வரை உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த அறிவிப்பிற்கு பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்.  இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும்இன்று எதிரொலித்தது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். எனவே அவை ஒத்தி வைக்கப்பட்டது.


இதை தொடர்ந்து இன்று சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படாது என மாநிலங்களவையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மாறாக யாருக்கு மானிய விலையில் சிலிண்டர் வழங்குவது என்பது குறித்து பரிசிலினை செய்யப்படும் என தெரிவித்தார்.