குப்பையில் பணம்! குடியரசு தினத்தில் குப்பையில் கொட்டிக்கிடக்கும் ரூபாய் நோட்டுகள்!
குப்பைமேட்டில் பணத்துக்கு என்ன வேலை? மது பாட்டில்களுடன் கேட்பாரற்று கிடந்த ரூபாய் நோட்டுகள்
பணம் பத்தும் செய்யும் என்று சொல்வார்கள். ஆனால், அதிகம் மதிக்கக்கூடிய பணத்தை யாருமே குப்பையில் போடமாட்டார்கள். அப்படி யாராவது தெரியாமல் போட்டால், அது மிகப் பெரிய செய்தியாகிவிடுகிறது.
நாட்டின் 73 குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
இருப்பினும் கோவை புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ALSO READ | பிளாக்கில் மது கிடைக்காததால் ஆத்திரம்..! பார் ஊழியர் கொலை
இந்த நிலையில் நேற்று சூலூர் கலங்கல் சாலையில் உள்ள டாஸ்மாக் பார் அருகில், குப்பை மேட்டில் வைத்து சிலர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களுடன் அட்டைப்பெட்டியில் ரூபாய் நோட்டுகளையும் அங்கேயே விட்டு சென்றுள்ளனர்.
குப்பை மேட்டில் பணம் மற்றும் மதுபாட்டில்கள் கேட்பாரற்று கிடந்ததை அவ்வழியாகச் சென்றவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றது.
ALSO READ | ஒரே கட்டமாக நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR