பருவமழை: வானிலை மையத்தின் புதிய தகவல்!
கோடை வெயில் தாக்கி வந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்துவருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறியுள்ளார்.
டெல்டா மற்றும் மேற்கு மாவட்டங்களில் தொடங்கியுள்ள பருவமழை, விரைவில் தமிழகம் முழுவதும் தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதற்கிடையே பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளது. அதில், 'இந்த ஆண்டு, தென்மேற்குப் பருவமழை 96% பெய்யும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த மழை 98% பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதுமே பருவமழை சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஜூலை மாதம் 96 சதவிகிதமும், ஆகஸ்ட் மாதம் 99 சதவிகிதமும் மழைப்பொழிவு இருக்கும்' என்று கூறியுள்ளது.