மோரா புயல்: தமிழகத்திற்கு பாதிப்பில்லை; வங்கதேசம் அருகே கரையை கடக்கும்
வங்கக்கடலில் உருவாகி உள்ள மோரா புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை. அது வங்கதேசத்தை நோக்கி நகருகிறது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணாமாக மோரா புயலாக உருவாகி உள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் வீசும் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், நாகை, பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் புயல் தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் உருவாகி உள்ள மோரா புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. மோரா புயல் நாளை பிற்பகல் வங்கதேசம் அருகே கரையை கடக்கும். தற்போது இந்த புயல் கோல்கட்டா அருகே, 660 கி.மீ., துாரத்தில் மையம் கொண்டுள்ளது.
வெப்பசலனம் காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.