மீண்டும் மீண்டும் கைது: இறுகும் அரசின் பிடி

தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் மதமாற்ற முயற்சி நடந்துள்ளது என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை போராட்டங்கள் நடத்தினார். இதன் எதிரொலியாகத்தான் ஏபிவிபி அமைப்பினரை அரசு கைது செய்துள்ளது.
தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டலினின் வீட்டை முற்றுகை செய்ய முயன்ற ஏபிவிபி அமைப்பினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன் தேசிய பொது செயலாளர் நித்தி திரிப்பாதி வரை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் விவகாரம் பூதாகரம் ஆகியுள்ளது.
ஏபிவிபி அமைப்பினர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே 5 பேர் கொண்ட குழு ஆளுநரை சந்தித்து முறையிட்டுள்ளனர். ஆனால் இதுவரை தமிழக அரசு அவர்களை விடுதலை செய்யவில்லை. இந்த நிலையில் அரசு மருத்துவர் சுப்பையா சண்முகம் நித்தி திரிப்பாதியை சிறையில் சென்று சந்தித்தார். அதனைத் தொடர்ந்து அவரையும் இடைநீக்கம் செய்திருக்கிறது சுகாதாரத் துறை.
இந்த நிலையில் மாணவர்கள் கைது செய்யப்பட்டபோது தந்தை பெயரையும் முகவரியையும் தவறாக பதிவு செய்த 12 மாணவர்கள் மீது மீண்டும் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்கின்றனர் காவல்துறையினர்.
மேலும் படிக்க | ஆசிரமத்தில் மாணவி தற்கொலை! காரணம் என்ன?
ஏபிவிபி அமைப்பினர் மீது இறுகும் தமிழக அரசின் பிடி, அரசின் வலதுசாரிகளுக்கு எதிரான ஒரு யுத்தமாகவே பார்க்கப்படுகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசு போராடி வருகிறது. மற்றொருபுறம் ஆளுநர் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தில் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்துகிறார். குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் ஊர்தி நிராகரிக்கப்படுகிறது.
இதேபோல தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் மதமாற்ற முயற்சி நடந்துள்ளது என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை போராட்டங்கள் நடத்தினார். இதன் எதிரொலியாகத்தான் ஏபிவிபி அமைப்பினரை அரசு கைது செய்துள்ளது.
வழக்கமாக போராட்டம் நடத்துபவர்களை கைது செய்து மாலையில் காவல்துறையினர் விடுவித்துவிடுவார்கள். ஆனால் எதிர்பாராவிதமாக இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அவர்களை வெளியே கொண்டுவர வலதுசாரியினர் முயற்சிமேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் படிக்க | வார்டன் தொல்லையா? மதமாற்றமா? லாவண்யாவின் புதிய வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR