’பண மோசடி மட்டுமல்ல.. இன்னும் இருக்கு’ ராஜேந்திரபாலாஜி மீது குவியும் புகார்கள்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 3 கோடி ரூபாய் பண மோசடி வழக்கு தவிர, மேலும் பல புகார்கள் வந்துகொண்டிருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி மு.நாசர் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருக்கிறார். அவரை 6 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் நடுகுதகை ஊராட்சியில் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், ராஜேந்திரபாலாஜி மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்துகொண்டே இருப்பதாகவும், அவர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ALSO READ | எங்கே இருக்கிறார் ராஜேந்திராபாலாஜி? சகோதரி மகன் உள்ளிட்ட 3 பேர் கைது
நடுகுதகை ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஆடு, மாடு, கோழி, நாய் உள்ளிட்ட அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. செயற்கைமுறை கருவூட்டல், குடல் புழு நீக்கம் போன்ற சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. இந்த முகாமை தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கிய அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் இருக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். முந்தைய ஆட்சியாளர்கள் கொரோனா பரவல் தங்கள் கைகளை விட்டுச் சென்றுவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், இப்போதைய முதலமைச்சர் அதனை திறமையாக கையாண்டு வருகிறார். வேலை வாங்கித் தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்த முன்னாள் அமைச்சர் மீது பல புகார்கள் வந்துள்ளது. ராஜேந்திர பாலாஜி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
ALSO READ | மாரிதாசை போல் அண்ணாமலையை கைது செய்ய முடியுமா? சி.வி.சண்முகம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR