தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி...
தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்!!
தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்!!
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பட்டியலில் தேசிய அளவில் தமிழகம் 1,173 வழக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும், 11 இறப்புகளை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075ல் இருந்து 1173 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவித்துள்ளது. இதே போல தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டார்.
தமிழகத்தில் நேற்று வரை மொத்தமாக 10 ஆயிரத்து 655 மாதிரிகள் பரிசோதனை செய்யபட்டதில் 1075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று மேலும் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173 ஆக அதிகரித்துள்ளது.
இதை தொடர்ந்து, தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்... தமிழகத்தில் இன்று மட்டும் 98 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செயபட்டுள்ளது. இன்று 98 பேருக்கு தொற்று உறுதியானதால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,173 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை,மொத்தம் 58 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் அரசு ஆய்வகங்கள் 25, தனியார் ஆய்வகங்கள் 9 உள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 905 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 51 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9352 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக அதிகரித்துள்ளது.