தமிழகத்தில் ஆவிகளுக்கு விருந்து படைக்கும் மலைவாழ் மக்கள்!
வேலூரில் மலைவாழ் மக்கள் ஆவிகளுக்கு விருந்து படைத்து வீட்டிற்கு அழைத்துச் செல்லும் அறிய நிகழ்வு கேட்போரை பிரமிக்கச் செய்கிறது.
பேய், பிசாசு, ஆவி என்றால் தெரித்து ஒடும் மக்களைத்தான் பார்த்திருப்போம். ஆவிகளை வீட்டிற்கு அழைத்து விருந்து வைக்கும் வழக்கத்தை எங்கேயாவது பார்த்தது உண்டா. ஆம் இதுபோன்ற திகிலூட்டும் வினோத சம்பவங்கள் வேலூர் மாவட்டத்தில் காலம் காலமாக நடந்து வருகிறது. காக்கைக்கு சோர் வைத்தால் முன்னோர்கள் வந்து அந்த உணவை சாப்பிட்டு விட்டு செல்கிறார்கள் என நினைக்கும் நம் சமூகத்தில் இது ஒன்றும் அவ்வளவு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அல்ல.ஆனால், ஆவிகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வது என்ற நிகழ்வை நினைக்கும்போது கேட்பவர்களுக்கு கொஞ்சம் பதட்டமாகத்தான் இருக்கும்.
வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்துள்ள அத்தியூர் ஊராட்சியில் இருக்கிறது குருமலை, நச்சிமேடு, வெள்ளக்கல் மலை, பள்ளகொல்லை ஆகிய மலை கிராமங்கள். இங்கு ஏராளமான மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு உண்டான பல்வேறு கலாச்சார நிகழ்வுகளில் ஆவிகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்து வைக்கும் நிகழ்வு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அங்குள்ள செல்லியம்மன் மற்றும் தஞ்சியம்மனுக்கு ஆண்டுதோறும் விழா எடுக்கும் மலைவாழ் மக்கள், அதற்கு முன்பாக ஆவிகளை வீட்டிற்கு அழைத்துச்செல்லும் நிகழ்வை விழாவாக கொண்டாடும் வழக்கத்தை பின் பற்றி வருகின்றனர்.
அந்த வகையில், இந்த ஆண்டும் இதேபோன்ற நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. ஊர் கோயிலில் ஒன்று கூடும் அந்த கிராம மக்கள், இறந்தவர்களுக்கான சீர் வரிசை பொருட்களை ஒரு இடத்தில் வைத்து மேளதாளம் முழங்க பாரம்பரிய நடனமாடி கடந்த ஆண்டில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு அனைவரும் ஒன்றாக செல்கின்றனர். அவர்களுடன் ஆவிகளும் வருவதாக நம்பும் மக்கள், இறந்தவர்களின் வீடுகளுக்குள் சென்றவுடன் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்துச் செல்கின்றனர்.
இறந்த பின்பும் ஆவியாக அவர்கள் குடும்பங்களோடு ஒன்றாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் பின்பற்றப்படும் இந்த நிகழ்வு சற்று கண்கலங்கச்செய்யும் வகையிலேயே இருக்கிறது. அதனை தொடர்ந்து கோயிலில் பூஜை செய்து சாமியாடும் பெண்களிடம் குறி கேட்கப்பட்டு திருவிழா வைப்பதற்கான நாள் குறிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து திருவிழாவை முன்னெடுக்கும் கிராம மக்கள், மலையில் வைத்து ஆடு, கோழி உள்ளிட்டவைகளை பலி கொடுத்து இறந்தவர்களுக்காக விருந்து வைக்கின்றனர். இதில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றாக பங்கேற்று உண்டு மகிழ்ந்து சிறப்பிக்கும் திருவிழா வினோதம்தானே.
மேலும் படிக்க | ஏசி காப்பர் பைப்புகளை திருடும் ஆசாமியை டிப்டாப் ஆக்கிய போலீஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR