முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என கேரள முதல்வருக்கு, தமிழக முதல்வர் கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், அணையின் நீர்மட்டம் சீராக இருப்பதைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு கடிதம் மூலம் பதிலளித்துள்ளார்.


முன்னதாக நேற்று கேரள முதல்வர் பினராயி விஐயன் அவர்கள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக வைத்திருக்க கூடுதலாக தண்ணீரைத் திறந்து விடுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தார்.



இந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல்வர் இன்று கேரள முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது, நீர்மட்டம் 142 அடிக்கு மிகாமல் தொடர்ந்து கண்காணிப்பதால் அணையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு முடிந்தவரை அதிகபட்ச தண்ணீர் கொண்டு செல்லப்படுவதாகவும், நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அளவை கண்காணிக்க போதிய ஒத்துழைப்பை தமிழக அதிகாரிகளுக்கு கேரள அதிகாரிகள் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 


மீண்டும் முல்லைப் பெரியாறு அணைக்கு மின் இணைப்பு வழங்கவேண்டும் எனவும் எனவும், ரூபாய் 1,65,000 தொகையை தமிழக அரசு கேரள மின்துறைக்கு செலுத்தியுள்ளதாகவும் இக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்!