18-ம் கால்வாய் கீழ்பகுதி சாகுபடிக்கு பெரியாறு அணை திறப்பு!
தேனி மாவட்டம் 18-ஆம் கால்வாயில் (பழனிவேல் ராஜன் கால்வாய்) பெரியாறு அணியிலிருந்து ஒருபோக பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப் பட்டுள்ளது!
தேனி மாவட்டம் 18-ஆம் கால்வாயில் (பழனிவேல் ராஜன் கால்வாய்) பெரியாறு அணியிலிருந்து ஒருபோக பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப் பட்டுள்ளது!
தேனி மாவட்டம் 18-ஆம் கால்வாயில் (பழனிவேல் ராஜன் கால்வாய்) பெரியாறு அணியிலிருந்து வினாடிக்கு 279 கன அடி வீதம் 9 நாட்களுக்கு இன்று முதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தேனி மாவட்டம் 18-ஆம் கால்வாயில் (பழனிவேல் ராஜன் கால்வாய்) கீழ் உள்ள 4614.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதேப்போல் தேனி பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பிடிஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்கால்களின் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கு வினாடிக்கு 100 கஅடி வீதம் இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப் பட்டுள்ளது.
இதன் மூலம் தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டங்களில் உள்ள 5146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் தமிழக அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது!