திமுக ஒன்றியச் செயலாளர் உட்பட 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு
திருச்சி அருகே செங்கதிர் சோலையை சேர்ந்த சிவக்குமாரை முன்விரோதம் காரணமாக கட்டையால் தலையில் அடித்துக் கொலை செய்த வழக்கில் திமுக ஒன்றியச் செயலாளர் உட்பட 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சி அருகே செங்கதிர் சோலையை சேர்ந்த சிவக்குமார் (எ) சோலை சிவா இவருக்கு மனைவி மற்றும் இருகுழந்தைகளுடன் இதே பகுதியில் வசித்து வரும் இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். முன்னதாக சென்ற வாரம் ரஜீவகாந்தி நகரில் உள்ள செங்கதிர் சோலை மயானத்தில் அரசு அலுவலர்கள் ஆக்கிரமிப்பை அகற்றியத்தில் கொலையான சிவக்குமாருக்கு தொடர்பிருப்பதாக கூறி அதே பகுதியை சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் கதிர்வேல் , வாசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் ரவி முருகையா, பிராபாகரன் (எ) மருதை ராஜ் மற்றும் தீபக் ஆகியோர் ஊரில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை மருதை ராஜ் மற்றும் தீபக் சிவகுமாரின் வீட்டருகே வந்து அவரை தகாத வர்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் வீட்டிலிருந்து வெளியே வந்த சிவக்குமாரை அவர்கள் வைத்திருந்த கட்டையால் தலையில் தாக்கியதாகவும் இதை தடுக்க சென்ற அவரது மனைவியும் தாக்கியதாக கூறப்படுகிறது. சிவகுமாரின் மனைவி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் இருவரும் தப்பித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
ALSO READ | அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கோடநாடு வழக்கு திரும்ப விசாரிக்கப்படுகிறது!
இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் வந்து பார்க்கையில் கட்டையால் தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிவக்குமார் மயங்கிய நிலையில் கிடந்திருக்கிறார். உடனே அவரை மீட்டு சிகிச்சைகாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர் சிவக்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் சிவக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து சிவகுமாரின் மனைவி சோமரசன்பேட்டை காவல் நிலையத்தில் திமுக ஒன்றிய செயலாளர் கதிர்வேல் , வாசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் ரவி ஆகியோரின் தூண்டுதலின் பேரில் பிராபாகரன் (எ) மருதை ராஜ் மற்றும் தீபக் ஆகியோர் தனது கணவரை கொலை செய்ததாக புகார் அளித்திருக்கிறார். புகாரை பெற்றுக்கொண்ட சோமரசன்பேட்டை காவல்துறையினர் திமுக ஒன்றிய செயலாளர் கதிர்வேல் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மீதான கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது தான் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | கோடநாடு விவகாரம் குறித்து EPS மற்றும் MKS பேசக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR