சென்னை எழும்பூரில் முஸ்லீம் யூத் லீக் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இளம் விஞ்ஞானி பள்ளப்பட்டி ரிஃபாத் ஷாரூக் குடும்பத்திற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் ஆறு லட்சம் மதிப்புள்ள வீட்டுமனையை வழங்கினார்.


மேலும் இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அபூபக்கர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான், யூத் லீக் தேசிய பொருளாளர் முஹம்மது யூனுஸ், மாநில முஸ்லீம் லீக் பொருளாளர் ஷாஜஹான் மற்றும் நிர்வாகிகள் அன்சாரி மதார் .முஹம்மது மனாஸிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.