பாசனத்திற்காக வரும் ஆக., 1-ஆம் நாள் மேட்டூர் அணை திறப்பு!
மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களின் பாசனத்திற்காக 1.8.2018 முதல் தண்ணீர் திறந்து விட, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்!

மேட்டூர் அணையில் இருந்து புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு திருச்சி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்ட வேளாண் பொதுமக்களிடம் இருந்து வந்த வேண்டுகோள்கனின் அடிப்படையில் மேட்டூர் அணையில் இருந்து புள்ளாம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக வரும் 1.8.2018 முதல் தண்ணீர் திரந்துவிடப் படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதன் மூலம் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 42,736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயப்பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.