நாம் தமிழர் கட்சி சார்பில் மழலையர் பாசறை பொதுக்கூட்டம்!!
நாம் தமிழர் கட்சியின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் இன்று 5 மணிக்கு மழலையர் பாசறை மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதைக்குறித்து நாம் தமிழர் கட்சி அறிவிப்பில் கூறியதாவது:-
நாம் தமிழர் கட்சியின் மழலையர் பாசறை நடத்தும் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் இன்று (09-09-2017) சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவிருக்கிறது.
இதில் நாம் தமிழர் கட்சியின் மழலையர் பாசறையைச் சேர்ந்த இளம் புரட்சியாளர்களின் எழுசியுரைகள் அடுத்த தலைமுறைக்கான அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் என்பதில் ஐயமில்லை. நிகழ்வின் இறுதியாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரையாற்றுவார் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.