நடுநிலைப்பள்ளியைத் தத்தெடுத்த நாம் தமிழர் கட்சி!!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் சோளங்குருணி என்ற ஊரில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்குகிறது. இங்கு சுமார் 250 மாணவ மாணவிகள் கல்வி பயிலுகிறார்கள்.
இந்தப்பள்ளியில் அடைப்படைவசதிகளான கழிவறைகள், அதற்கான தண்ணீர் வசதி போன்றவைகள் ஏதுமற்ற நிலையில் இங்கு பயிலும் மாணவ மாணவிகள் அவதியுறுகிறார்கள் என்பதை அறிந்து இந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை தென் மண்டல நாம்தமிழர் கட்சி சார்பில் செய்து கொடுக்க முடிவு செய்து அதற்கான களப்பணிகளில் இறங்கியுள்ளனர்.
பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் ஆய்வு செய்த போது பள்ளியை ஆய்வு செய்து பார்த்தபொழுது மாணவர்களுக்கான கழிப்பிடமும், மாணவிகளுக்கான கழிப்பிடமும் தண்ணிர் வசதியில்லாமலும் அதற்கான குழாய்கள்கூட இல்லாமலும், கட்டிடங்கள் சிதிலமடைந்த நிலையில் கழிவறைக்கோப்பைகள் உடைந்த நிலையில் மேற்கூரை இல்லாமலும், ஆசிரியைகள் பயன்படுத்தக்கூடிய கழிவறைகள்கூட தண்ணீர் வசதி இல்லாமல் திறந்தவெளியாக இருந்துள்ளன.
காற்றாடி இல்லாத வகுப்பறைகள், வகுப்பறை முழுவதும் அழுக்கடைந்து வெள்ளையடிக்கப்படாத சுவர்கள் என நிறையக் குறைகளோடு இயங்கிக்கொண்டிருந்த பள்ளியில் முதற்கட்டமாக கழிப்பறை மற்றும் தண்ணீர்வசதியை உடனே இந்த மாணவர்களுக்கு செய்துதர முடிவெடுத்து ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் அனுமதி கேட்டு பள்ளியை தத்தெடுத்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியினரின் முயற்சியை அடுத்து திங்கட்கிழமை காலை பள்ளியில் ஆலோசனைக்கூட்டம் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் தீபாவளி விடுமுறை முடிந்தவுடன் முதல் வேலையாக ஆழ்குழாய் அமைத்து வேலையை துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற முயற்சிகளையும், மக்கள்நலத்திட்டப் பணிகளையும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் முன்னெடுக்குமாறு சீமான் அறிவுறுத்தியுள்ளார்.