61 நாட்களுக்கு பிறகு எதிர்பார்த்த அளவிற்கு மீன்கள் கிடைக்காததால் நாகை மீனவர்கள் ஏமாற்றம்
61 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் இன்று அதிகாலை வருத்தத்துடன் கரை திரும்பினர்.
61 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்து கடந்த 14 ஆம் தேதி நள்ளிரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் இன்று அதிகாலை கரைக்கு திரும்பினர். பெருத்த எதிர்பார்ப்புடன் சென்ற மீனவர்களுக்கு போதிய அளவு மீன்கள் கிடைக்காததால், ஏமாற்றத்துடன் கரை திரும்பியுள்ளனர். ஏராளமான விசைப்படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்களை வாங்குவதற்கு நாகை துறைமுகத்தில் காலை முதல் ஆயிரக்கணக்கான மீன் வியாபாரிகளும், மீன் பிரியர்களும் திரண்டனர்.
வழக்கமாக அதிகமாக கிடைக்கக்கூடிய வாவல், வஞ்சரை, பாறை உள்ளிட்ட மீன்கள் குறைந்த அளவிலேயே கிடைத்ததாகவும், மீன்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக 700 ரூபாய்க்கு விற்பனையான நண்டு மற்றும் இறால் 600 ரூபாய்க்கு விற்பனையாவதாகவும், 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வஞ்சரம், வாவள் மீனவர்கள் 600 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுவதாகவும் வருத்தம் தெரிவித்தனர். ஒருகிலோ 400 ரூபாய்க்கு விற்பனையான பாறை மீன் 200 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்பனையான விலை மீன்கள் 250 ரூபாய்க்கும், கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையான கனவா 340 ரூபாய்க்கும், நாகை துறைமுகத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க | ‘ஜெல்லி’ மீன்களால் பறிபோன நீச்சல் வீராங்கனையின் கனவு.!
2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை டீசல் உள்ளிட்ட செலவு செய்து கடலுக்கு சென்ற தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும், பிடித்து வரப்பட்ட மீன்கள் செலவினங்களை ஈடுகட்டவே சரியாக இருப்பதாகவும் கூறினார். இதே நிலைமை தொடர்ந்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | கடல் வழியாக துறைமுகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள் - பழவேற்காட்டில் பதற்றம்.!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR