Tamil Nadu Latest News Updates: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் பல்வேறு ஏடிஎம்களில் கொள்ளையடித்த கும்பல், அது தப்பிச்செல்ல முயன்ற கண்டெய்னர் லாரியுடன் நாமக்கல் அருகே போலீசாரிடம் பிடிபட்டது. அவர்கள் தப்பி ஓட முயன்ற நிலையில் போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் ஒரு கொள்ளையன் உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. மொத்தம் துப்பாக்கி முனையில் 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஒருவர் தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பச்சாபாளையம் அருகே லாரி பிடிக்கப்பட்டு கண்டெய்னரை திறக்கும்போது உள்ளே ஆயுதங்களுடன் இருந்த கொள்ளையர்கள் தாக்க போலீசார் பதிலுக்கு துப்பாக்கிசூடு நடத்தி உள்ளனர். கேரளா திருச்சூர் மாவட்டத்தில் 3 இடங்களில் கொள்ளையடித்த இந்த கொள்ளையர்களை நாமக்கல் குமாரபாளையத்தில் சுற்றி வளைத்து தமிழ்நாடு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மூன்று ஏடிஎம் மட்டுமின்றி மற்றொரு ஏடிஎம் ஒன்றையும் அந்த கும்பல் தூக்கிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த கும்பல் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | Ration Card : ரேஷன் அட்டைதாரர்களுக்கு விரைவில் குட்நியூஸ் அறிவிக்கிறது தமிழக அரசு


கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் இரண்டு டோல்கேட்டில் அந்த கண்டெய்னர் லாரியை நிறுத்த முயன்றபோது, அவர்கள் நிற்காமல் தப்பி வந்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த லாரி நாமக்கல் மாவட்டத்தில் பிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கேரளா தனிப்படை போலீசார் நாமக்கலுக்கு விரைந்துள்ளதாக திருச்சூர் எஸ்.பி., தகவல் அளித்துள்ளனர்.


கேரளாவின் ஷோர்னூரில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்-இல் ரூ.10 லட்சமும், வேறு இரண்டு எஸ்பிஐ ஏடிஎம்களில் ரூ.55 லட்சம் என மொத்தம் ரூ. 60 லட்சத்தை கொள்ளை அடித்ததாக கூறப்படுகிறது. தற்போது பிடிபட்ட கண்டெய்னரில் இருந்து சுமார் ரூ. 60 லட்சம் வரை ரொக்கமாக போலீசார் கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பச்சாம்பாளையம் என்னும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இன்று கோவை பகுதியில் இருந்து சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வந்ததால் சாலையோரம் நின்ற இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.


வாகனத்தை நிறுத்த பொதுமக்கள் முயற்சி செய்தும் வாகனம் நிற்காமல் வேகமாக சென்றதால் இதுகுறித்து பகுதி மக்கள் குமாரபாளையம் மற்றும் வெப்படி போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த அந்த வாகனத்தை நிறுத்த முயற்சி செய்தும் நிறுத்தாதால் சாலையில் குறுக்க நின்று போலீசார் வாகனத்தை நிறுத்த முயற்சி செய்தனர். 


ஆனால் வாகனத்தை ஓட்டுனர் நிறுத்தாததால் போலீசார் கல் வீசி தாக்கி லாரியை நிறுத்தினர். இதனை அடுத்து பொதுமக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லாரியில் இருந்து குற்றவாளிகள் பயங்கர ஆயுதங்களுடன் துப்பாக்கியுடன் இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர். இதனால் போலீசார் பொதுமக்களை யாரும் அருகில் விடாமல் வாகனத்தை சுற்றி வளைத்தனர்.


பின்னர் நாமக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் வந்த அதிரடி படை போலீசார் கண்டெய்னர் வாகனத்தை வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று திறந்து பார்த்தனர். இதில் அந்த வாகனத்தில் சொகுசு காரான புதிய இன்னோவா கார் ஒன்றும் குற்றவாளிகள் ஆறு நபர்கள் இருந்ததாக தெரிகிறது. மேலும் அந்த காருக்குள் கத்தகதையாக ரூபாய் நோட்டுகளும் இருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். குற்றவாளிகளை மட்டும் போலீசார் தற்பொழுது வெப்படி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது. 


மேலும் படிக்க | 1.5 லட்சம் மின் மீட்டர்கள் மாற்றம் என மின்சார வாரியத்தின் அதிரடி அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ