பிரதமர் மோடி நெருப்பில் பூத்த மலர், அவருக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் நாட்டுக்கு விடப்பட்ட சவால் - பொன் ராதாகிருஷ்ணன்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாவோயிஸ்டுகள் 5 பேரை கைது செய்த நிலையில், அவர்களுக்கு வந்த கடிதத்தில் அதிர்ச்சி தரும் ஒரு தகவல் வெளியாகியிருந்தது. மாவோயிஸ்டுகளுடன் தொடர்புள்ளதாக கருதப்படும் ரோனா ஜேக்கப் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைப் போல, பிரதமர் மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதையடுத்து, இந்த சதி திட்ட கடிதம் குறித்த விவகாரம் உள்துறைக்கு சென்ற நிலையில், பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த செய்தி குறித்து பிரதமர் மோடி நெருப்பில் பூத்த மலர், அவருக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் நாட்டுக்கு விடப்பட்ட சவால் என்று தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்திற்கு புதிய ரயில் திட்டங்கள் வந்துள்ளன, மத்திய அரசின் நிதி அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.