Republic Day: கோவையில் தேசியக் கொடி தயாரிப்பு பணிகள் தீவிரம்
குடியரசு தினம் நெருங்குவதைத் தொடர்ந்து, கோவை டவுன்ஹால் பகுதியில் தேசியக் கொடி தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.
கோவை: குடியரசு தினம் நெருங்குவதைத் தொடர்ந்து, கோவை டவுன்ஹால் பகுதியில் தேசியக் கொடி தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.
30 ‘அடி’ அளவுகளிலும் தேசியக் கொடி தயாரிக்கப்பட்டு வருகிறது.கதர்துணியினால் ஆன தேசியக் கொடிகள் குறைந்தபட்சம் 5 ரூபாய் முதல் அதிகபட்சம் 2 ரூபாய் ஆயிரம் வரை விற்கப்படுகின்றன.
மைக்ரோ துணியினால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகள் குறைந்தபட்சம் 30 ரூபாய் முதல் அதிகபட்சம் 1,500 ரூபாய் வரை விறக்கப்படுகின்றன.
வெல்வெட் துணியினால் ஆன தேசியக் கொடிகள் குறைந்தபட்சம் 80 ரூபாய் முதல் அதிகபட்சம் 2 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்கப்படுகின்றன.
தேசியக்கொடி தயாரிப்புப் பணி
வழக்கமாக குடியரசு தினத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே தேசியக் கொடி உற்பத்தி தொடங்கி விடுவதோடு, அதற்கான ஆர்டர்களு வரத் தொடங்கிவிடும். தொழில் களைகட்டி, தயாரிப்புப் பணி தொடங்கிவிடும்,
ஆனால், இந்த ஆண்டில் கொரோனா அச்சம் காரணமாக, எதிர்பார்த்த அளவுக்கு ஆர்டர்கள் கிடைக்கவில்லை, தொழிலும் சுணங்கிப் போயிருக்கிறது.
ALSO READ | தேனியில் யானை தந்தம் பறிமுதல்! கடத்த முயன்ற 10 பேர் கைது
சில தினங்களுக்கு முன்பு தான், தேசியக் கொடி தயாரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வழக்கமாக, பள்ளிகள், கல்லூரி வளாகங்களில் கட்டுவதற்கும், கம்பத்தில் கொடி ஏற்றுவதற்காகவும் அதிகளவில் ஆர்டர்கள் கிடைக்கும்.
ஆனால், நடப்பாண்டு கல்வி நிலையங்கள் (School and Colleges) முழுமையாக திறக்கப்படாததால் எதிர்பார்த்த அளவுக்கு கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் இருந்து ஆர்டர்கள் கிடைக்கவில்லை.
அதேபோல, தமிழகம் (Tamil Nadu), கேரளா, பாண்டிச்சேரி அரசுகளின், அரசு மற்றும் தனியார் துறையினர் இங்கு தேசியக் கொடி ஆர்டர் கொடுப்பார்கள்.
ஆனால், நடப்பாண்டில் கொரோனா அச்சத்தால் இந்த ஆர்டரும் குறைந்து காணப்படுகிறது. இருப்பினும், நடப்பாண்டு, விற்பனை வழக்கமான அளவில் இல்லையென்றாலும், குறிப்பிட்ட அளவாவது விற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | தமிழகத்தில் வார இறுதி ஊரடங்கு! இந்த சேவைகள் உண்டு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR