நவராத்திரி விழா கடந்த வாரம் துவங்கி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவில்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில், அம்மன் எழுந்தருதல், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர நவராத்திரி சிறப்பாக கொலு அமைத்தும் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவராத்திரியில் ஒன்பதாவது நாளாக ( நவமி) சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.


கல்விக்கடவுளான சரஸ்வதியை வணங்கும் வகையில், சரஸ்வதி பூஜையும் மற்றும் தொழில், வர்த்தகம் நிறுவனங்கள், அலுவலகங்களில் ஆயுத பூஜையும் நடத்தப்படுகிறது.


சரஸ்வதி பூஜை கொண்டாடும் முறை:-


வ‌ழிபாடு செ‌ய்வத‌ற்கு மு‌ன்பு, வ‌ழிபடு‌ம் இட‌த்தை தூ‌ய்மை‌ப்படு‌த்தி ச‌ந்தன‌ம் தெ‌ளி‌த்து, கு‌ங்கும‌ம் இட வே‌ண்டு‌ம். 


மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும். 


சர‌ஸ்வ‌தி‌யி‌ன் பட‌த்‌தி‌ற்கு‌ படை‌க்க‌ப்பட பொரு‌ட்களு‌க்கு‌ம் ச‌ந்தன‌ம் கு‌ங்கும‌ம் இட வேண்டும். 


சர‌ஸ்வ‌தி‌யி‌ன் பட‌த்‌தை பூ‌க்க‌ளால் அல‌ங்க‌ரி‌க்க வே‌ண்டு‌ம். சரஸ்வதி படத்தின் கீழ் வாழை இலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப் பட்டவைகளை வைக்க வேண்டும். 


சரஸ்வதி படத்தின் அருகில் புத்தகங்களை வைக்க வேண்டும். படையலுக்காக பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் இவை அனைத்தும் வாழையிலையில் வைக்க வேண்டும். 


கலசம் வைத்து அதில் தேவியை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜித்து வழிபட நலன் உன்டாகும். கலைவாணியை பூஜித்து வணங்கினால் அருள் பூரணமாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


ஆயுத பூஜை கொண்டாடும் முறை:-


ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.