கோலிவுட்டில் நம்மிடம் இருக்கும் நவநாகரீக பிரபலங்களில் நயன்தாராவும் ஒருவர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகை ஒவ்வொரு முறையும் எளிமையான ஆடைகள் மற்றும் குறைந்தபட்ச ஒப்பனையுடன் தனது தோற்றத்தை வெளிப்படுத்துகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ​​கோலாமாவு கோகிலா திரைப்படத்தில் எளிமையான தோற்றத்தில் தோன்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த வகையில் தற்போது திரையில் அல்லாமல் நிஜ உலகிலும் தனது எளிமையான தோற்றத்துடன் ரசிகர்களுக்கு காட்சியளித்துள்ளார்.


ஆம்,. சில நாட்களுக்கு முன்பு, நடிகை ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் காணப்பட்டுள்ளார். நீல நிற போல்கா-புள்ளியிடப்பட்ட மேக்ஸி ஆடையைத் அணிந்து வந்த அவருடன் அவரது ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதியும் தென்பட்டார். கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி இவர்கள் இருவரும், ரஜினிகாந்தின் வரவிருக்கும் படமான தலைவர் 168 படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றனர் என கூறப்படுகிறது. இதனிடையே விமான நிலையத்திலிருந்து நயன்தாராவின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.




நயன்தாரா இறுதியாக ஜனவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் பிரவேசம் செயத் ரஜினிகாந்தின் தர்பாரில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஒரு சிறிய பாத்திரம் மட்டுமே அளிக்கப்பட்டது. 


இந்நிலையில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்ததில் உருவாகி வரும் ரஜினிகாந்த் உடனான அவரது அடுத்த படத்தில் ரசிகர்களின் கண்கள் திரும்பியுள்ளன. தற்காலிகமாக தலைவர் 168 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ் மற்றும் சூரி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. தலைவர் 168 திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் கீழ் கலனிதி மாரன் தயாரிக்கிறார். இப்படத்திற்கு டி இம்மான் இசையமைத்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.