புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைதிரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களில் இருந்து சுமார் 411 விசைப்படகுகள் கடலுக்கு சென்றன. இவற்றில் 215 படகுகள் கரை திரும்பியுள்ளது, மீதமுள்ள 176 படகுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா, கோவா, குஜராத் ஆகிய இடங்களை தங்குதளமாகக் கொண்டு 235 படகுகள் சென்றன., இதில் 100 படகுகள் கரை திரும்பி உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.


மீதமுள்ள 135 படகுகளில் 66 படகுகளுக்கு தகவல் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படகில் உள்ள மீனவர்கள் விரைவில் கரை திரும்புவார்கள் என்று மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. மீதமுள்ள 89 படகுகளில் சென்ற 801 மீனவர்களுக்கு தகவல் அளித்து அவர்களை கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடலில் இருக்கும் மீனவர்களுக்கு ஹெலிகாப்டர் மற்றும் கப்பல்களில் உள்ள சேட்டிலைட் போன் மூலம் தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்!