அதிமுக இரு அணிகளும் இணைவது பணம் சம்பாதிக்கவா? கட்சியை காப்பாற்றவா? என திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-


டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.


நாளை (25-ம் தேதி) நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் அவர்கள் திரளாக பங்கேற்பார்கள்.


தமிழகத்தின் தேவைக்காக மத்திய அரசிடம் எடப்பாடி பழனிச்சாமி ரூ. 17 ஆயிரம் கோடி கேட்டுள்ளார். இதனை மத்திய அரசு வழங்க வேண்டும். குடிநீர் பிரச்சனைக்காக மத்திய அரசு ரூ. 52 கோடி ஒதுக்கி உள்ளது. இந்த நிதியை கூடுதலாக வழங்க வேண்டும்.


இதே போல் நீட் தேர்வில் தமிழகத்திற்கு விதி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்தே வருகிறது. இந்த நிலை மாற வேண்டும்.


அதிமுக-வின் 2 அணிகளும் சேர வேண்டும் என நான் ஏற்கனவே கூறி இருந்தேன். இப்போது அதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த இணைப்பு பணம் சம்பாதிக்கவா? அல்லது கட்சியை காப்பாற்றவா? என்று எனக்கு தெரியாது. 


தமிழகத்தில் தலித் மக்கள் தொடர்ந்து தொல்லைகளை சந்தித்து வருகின்றனர். வன்கொடுமை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.