சென்னை: தனிநபர்கள் மற்றும் பொருட்களின் சரக்கு போக்குவரத்துக்கு மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலங்களுக்கு உள்ளேயும் இயங்க எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டு உள்ளது. இதனையடுத்து இன்று மதியம் 3 மணியளவில் தமிழக அரசு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட அதிகாரிகளுடன் (District magistrate) தலைமைச்செயலாளர் சண்முகம் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தின் முடிவில் தமிழ் நாட்டில் இ-பாஸ் முறையை விலகிக்கொள்வதா? இல்லை தொடர்வதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.


இ-பாஸ் (E-PASS)  நடைமுறையை விலக்கிக்கொண்டால் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது மிகச் சவாலாக இருக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ |  E-paas வாங்கித் தருகிறோம் எனக் கூறுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம் -எச்சரிக்கை


கொரோனா பரவத் தொடங்கிய பிறகு ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கும், வேறு மாநிலத்திற்குச் செல்வதற்கும் தமிழகத்தில் இ-பாஸ் (E-PASS) நடைமுறைப் படுத்தப்பட்டது. இதன் மூலம் ஊரடங்கு (Lockdown) காலத்தில் இ-பாஸ் பெற்ற பிறகு தான் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்துக்கு, மாநிலத்திற்கும் செல்ல இயலும்.