நீட் தேர்வு தொடர்பான வழக்குகளை விரைவில் முடிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் ஆகியோரை தமிழக முதல்வர் உடனே சந்தித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவிற்கு ஒப்புதல் பெறவேண்டும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட பல அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.


இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகளை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து வருகிறது. இது தொடர்பாக புதிய தொழில்நுட்பங்களை அறிவதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் டெல்லி வந்தார்


அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்:- ‘நீட்’ தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசுடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. தமிழகத்தில் கல்வித்துறையை பொறுத்தவரை நாங்கள் கேட்ட நிதியை மத்திய அரசு தவறாமல் தந்துள்ளது. 


இதுதொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அவை முடிவுக்கு வந்த பின்னர் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் உரிய முடிவு எடுப்பார்கள். இருப்பினும் 70 ஆயிரத்து 412 மாணவ-மாணவிகளை ஆன்லைன் மூலம் தேர்வு செய்து, 412 மையங்களில் ‘நீட்’ தேர்வு பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது என்றார். 


மேலும் அவர், தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு நடைபெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் உறுதி கூறினார்.