பொதுமக்கள் ஊக்கப்படுத்தினால் மட்டுமே அரசு பள்ளிகளை மேம்படுத்த முடியும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2013, 2014-ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வெழுதிய 82,000 பேருக்கு பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்ட அவர், ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்தி பாடவாரியாக தேர்வு செய்து பணி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும் தமிழகத்தில் 1248 பள்ளிகளை அரசு மூட முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் தவறானது எனவும், தமிழகத்தை பொருத்தவரை 45 பள்ளிகளில் மட்டுமே ஒரு மாணவர் கூட சேராத நிலை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


முன்னதாக சட்டப்பேரவை கூட்டத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவிக்கையில்., "தமிழக அரசு பள்ளிகளில் ஒரு மாணவர்கள் கூட சேராத பள்ளிகளை தற்காலிக நூலகங்களாக மாற்ற அரசு முடிவெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அந்த வகையில் தமிழகத்தில் 45 பள்ளிகளில் மட்டுமே ஒரு மாணவர் கூட சேராத நிலை உள்ளது என கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த 45 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அருகிலுள்ள பள்ளிகளில் நியமிக்கப்படுவார்கள் என்றும், இதனால் ஈராசிரியர் பள்ளிகள் 4 ஆசிரியர்களுடன் சிறப்பாக செயல்படும் என்றும் அறிவித்திருந்தார்.


நூலகங்களாக மாற்றப்படும் பள்ளிகளில் மீண்டும் 6 மாதங்களுக்கு பின்னர் மாணவர் சேர்க்கை நடைபெறும். மாணவர்கள் மீண்டும் சேரும்போது பள்ளிகள் செயல்படும் என்றார் எனவே எந்த பள்ளிகளையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் தற்போது அரசு பள்ளிகள் மூடல் போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பும், ஊக்கமும் தேவை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.