சென்னை: சமீபத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக ஒரே நாளில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், நடிகர் சூர்யா (Actor Suriya), நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார். அதில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாகக் கொண்டு வருகிறது. மகாபாரத காலத்து (Manuneethi Tests) துரோணர்கள்‌ ஏகலைவன்களிடம்‌ கட்டை விரலை மட்டுமே காணிக்கையாகக் கேட்டார்கள்‌. நவீனகால துரோணர்கள்‌ முன்னெச்சரிக்கையுடன்‌ ஆறாம்‌ வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும்‌ என்று கேட்‌கிறார்கள். ஏழை, எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது எனக்கூறியிருந்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒட்டுமொத்த தமிழக (Tamil Nadu People) மக்களின் எண்ண ஓட்டத்தை நடிகர் சூர்யா பிரதிபலித்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேநேரத்தில், நடிகர் சூர்யாவின் (Suriya Sivakumar) கருத்து நீதிமன்றத்தின் மாண்பை அவமதிக்கும் வகையில் உள்ளதாகக்கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற (Chennai High Court) நீதிபதிக்கு எஸ்.எம்.சுப்ரமணியம் (SM Balasubramaniam) கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இதை எதையும் பொருட்படுத்தாமல், மாணவர்கள் மீது அக்கறை கொண்ட சூர்யா, மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒன்றிணைவோம்.. மாணவர்களோடு துணை நிற்போம்" எனப் பதிவிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.


ALSO READ | 


இன்னும் மாறாத அரசு பள்ளிகளின் நிலை - வேதனையை வெளிப்படுத்திய நடிகர் சூர்யா


சூர்யாவை பார்த்து பெருமைப் படுகிறேன் - வீடியோ வெளியிட்ட நடிகர் சத்யராஜ்


ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளை ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு வழங்க வேண்டும்- நடிகர் சூர்யா


அந்த காணொளியில் "ஒன்றிணைவோம்.. மாணவர்களோடு துணை நிற்போம். ஒருத்தர் படிச்சா அந்த வீடு மாறும், ஒவ்வொருத்தரும் படிச்சா இந்த நாடே மாறும். இந்தப் பொருளாதார நெருக்கடியில் நிறைய மாணவர்கள் தங்களடைய கல்வியை பாதியில் கைவிட்டு இருக்கிறார்கள். நாம நினைச்சா அத மாத்திடலாம்" எனக் கூறியுள்ளார்.


 



சனிக்கிழமையன்று, ஒரே நாளில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு (Neet Exam 2020) அச்சத்தால் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மூன்று மாணவர்கள் தேர்வுக்கு முன்னதாக தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டனர். மதுரைச் சேர்ந்த ஜோதி ஸ்ரீ துர்கா (19), தர்மபுரி மாவட்டம் இலக்கியாம்பட்டியைச் சேர்ந்த எம் ஆதித்யா (20), நமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த எம்.மோதிலால் (21) போன்றவர்கள் ஆவார்கள்.