நீட் தேர்வு: மத்திய அரசு மீது அமைச்சர் புகார்
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இரண்டாவது நாளாக இன்று கூடியது. பள்ளிக் கல்வி, உயர் கல்வி, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை குறித்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, நீட் தேர்வில் அரசின் கொள்கை என்ன என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜெயலலிதாவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.
நீர் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கிராமப்புற மாணவர்களை பாதுகாக்க உள்ஒதுக்கீடு கொண்டுவர ஆலோசிக்கிறோம். இது தொடர்பாக சட்டவல்லுநர்களிடம் ஆலோசனை செய்து வருகிறோம் என்றார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இது தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடைபெற்று வருகிறது'' என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார்.
மேலும் கிராமப்புற மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு கொண்டுவருவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.