சென்னை: நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க முதல்வர் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேநேரத்தில் நீட் விலக்கு (NEET Exemption Bill) தொடர்பாக இன்று நடந்து வரும் சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக (AIADMK) புறக்கணித்துள்ளது. ஏற்கனவே பாஜக (BJP) பங்கேற்காது என அறிவித்த நிலையில் அதிமுகவும் முதல்வரின் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


13 சட்டமன்ற கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் (TN CM MK Stalin) அழைப்பு விடுத்த நிலையில் அதிமுக, பாஜக புறக்கணிப்பு. முதல்வர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், பாமக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 11 கட்சிகள் பங்கேற்க உள்ளனர்


ALSO READ | NEET Exemption Bill: திருப்பி அனுப்பிய ஆளுநர் - அடுத்தது என்ன!?


சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க உள்ள கட்சிகளின் விவரம்


1) திமுக,
2) காங்கிரஸ்,
3) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்,
4) இந்திய கம்யூனிஸ்ட்,
5) பாட்டாளி மக்கள் கட்சி
6) மனிதநேய மக்கள் கட்சி,
7) விடுதலை சிறுத்தைகள் கட்சி, 
8) மதிமுக,
9) கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி,
10) தமிழக வாழ்வுரிமை கட்சி, 
11) புரட்சி பாரதம் கட்சி.


ALSO READ | NEET: நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் தமிழக ஆளுநர்


முக்கிய அம்சங்கள்: 


- நீட் விலக்கு மசோதாவை (NEET Exemption Bill) சபாநாயருக்கு திருப்பி அனுப்பிய ஆளுநர்.


- அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க இன்று சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.


- பாஜக பங்கேற்காது என அறிவித்த நிலையில் அதிமுகவும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.


- கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துகளை தெரிவிக்க உள்ளனர்.


- நீட் சட்ட மசோதாவை (NEET Exemption Bill) மீண்டும் சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி நிறைவேற்றது தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளதாக தகவல்.


- இந்த கூட்டதிற்கு பிறகு நீட் (NEET) விவகாரத்தில் அடுத்தக்கட்ட முடிவு.


ALSO READ | நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களை ஒருங்கிணைக்க தமிழக அரசு முடிவு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR