நீட் தேர்வு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டிய திமுகவினர் இன்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இன்று தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.
எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு பதிலளித்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வு விவகாரத்தில் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தமிழக அரசு போராடி வருவதாகவும், மேலும் நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் தர இருப்பதாக தெரிவித்தார்.
இதனால், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சட்டப்பேரவையில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.