ஆண்டுக்கு ஒருமுறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீட் தேர்வு பிப்ரவரி, மே ஆகிய மாதங்களில் வருடத்திற்கு இரண்டு முறை தேர்வு நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று அறிவித்தார்.


இந்நிலையில், இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது...! 


கோவையில் வருகிற 12-ந் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரில் இருந்து உதவி கல்வி அலுவலர் வரை அனைத்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.  


பள்ளிக் கல்வித்துறையின் சிறப்பு திட்ட ஆய்வு கோவை, மதுரை, திருச்சி, சென்னையில் நடைபெற உள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் 20 ஆயிரம் மாணவர்களுக்கு 500 ஆடிட்டர்களை வைத்து கணக்கு தணிக்கை(சி.ஏ.) படிப்பு தொடர்பான பயிற்சி வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக ஈரோட்டில் 2700 மாணவர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.


இதையடுத்து, மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது குறித்து தமிழக அரசுக்கு இன்னும் முறையாக கடிதம் வரவில்லை. அப்படி கடிதம் வந்தால் ஆண்டுக்கு ஒரு முறை நீட் தேர்வு நடத்த தமிழக அரசு வலியுறுத்தும் எனவும் அனைவருக்கும் வேலை என்ற உத்தரவாதத்துடன் 12 ஆம் வகுப்பிலேயே திறன் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்!