தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தனது கட்சி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் அரசியலில் இறங்கியுள்ள கமல் மற்றும் ரஜினியை மறைமுகமாக குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில் அவர் தெரிவித்துள்ளது; அரசியல் தட்பவெப்பம் அறிந்து, புதிய புதிய பறவைகள் சிறகடிக்க நினைக்கின்றன. ஜனநாயகம் என்பது எல்லாருக்குமான வானம். எந்தப் பறவையின் சிறகுகளுக்கு எவ்வளவு வலு இருக்கிறதோ. அதற்கேற்ப சிறகடித்துப் பறந்து, அதன்பின் பாதை தெரியாமல் பயணம் தடைப்பட்டு ஓய்வெடுப்பதை அரசியல் களம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது என்று ஸ்டாலினின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 


அதாவது தற்போதைய அரசியல் சூழலை பயன்படுத்தி, ரஜினியும் கமலும் அரசியலில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர், அரசியலுக்கு வருவது அவர்களது உரிமை, ஜனநாயகம் அதனை அனுமதிக்கிறது. அதே நேரத்தில் இறுதி வரை நிலைக்க முடியுமா, அதற்கான வலு இருவரிடமும் இருக்கிறதா என கேள்வி எழுப்புவது போல் அமைந்திருக்கிறது.


கமலும்,ரஜினியும் தங்களுக்கு போட்டியில்லை என அதிமுக தொடர்ந்து கூறிவரும் நிலையில், கள எதார்தத்தை பிரதிபலித்து, அதனை சமாளிக்க என்ன செய்ய வேண்டுமென ஸ்டாலின் குறிப்பிட்டு கடிதம் எழுதியிருப்பது, கள மாற்றத்தை உணர்ந்திருப்பதை காட்டுகிறது.