அடுத்த கல்வியாண்டில் 2-8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவிக்கையில் அடுத்த கல்வியாண்டில் 2-8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.


மேலும் மாணவர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கும் வகையில் ஸ்கில் ட்ரெயினிங் தொடர்பான 12 பாடங்கள் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக பள்ளி மாணவர்களுக்கு CA பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த மாதம் முதல் மாணவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படும் எனவும் இந்த சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்.


அதேவேலையில் அடுத்த மாதத்திற்குள் 5200 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் துவங்கப்படும் எனவும், 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணையதளம் மற்றும் வைபை வசதி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


புதிய கல்வித்திட்டத்தின் கீழ் தமிழக பள்ளிகளில் பல புதிய திட்டங்கள், கட்டுபாடுகள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. முன்னதாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறை மூலம் வருகைப்பதிவேடு குறிக்கப்படும் என தமிழ அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது பின்னர் மாணவர்களுக்கும் வருகைப் பதிவேட்டில் புதிய தொழில்நுட்பத்தினை புகுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


மேலும் தமிழகத்தின் பள்ளிகளில் நடப்பாண்டு முதல் புதிய பாடத்திட்டம் படிப்படியாக புகுத்தப்படவுள்ளது. அதன்படி முதற்கட்டமாக நடப்பாண்டில் 1, 9-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதனையடுத்து அடுத்தாண்டு இதற வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.