சென்னை வந்தடைந்த புதிய கவர்னராக பதவி ஏற்க உள்ள பன்வாரிலால் புரோகித்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு ஆகஸ்டு 30-ம் தேதி தமிழக கவர்னராக 5 ஆண்டுகள் பணியாற்றிய ரோசய்யாவின் பதவிகாலம் முடிவடைந்தது. இதையடுத்து மகாராஷ்டிர மாநில கவர்னராக இருந்து வரும் வித்யாசாகர் ராவ் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி தமிழகத்துக்கு பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார். 


இதையடுத்து தமிழகத்துக்கு முழு நேர கவர்னரை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், தமிழகத்தின் கவர்னராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார் என அதிகாரபூர்வமான தகவல் வந்தது.


இதையடுத்து, நாளை புதிய கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்க உள்ள நிலையில், அவர் இன்று சென்னை வந்துள்ளார்.


முன்னதாக, பொறுப்பு கவர்னராக பதவி வகித்த வித்யாசாகர் ராவ் இன்று விடைபெற்றார். அவருக்கு இன்று காலை சென்னை விமான நிலையத்தில் பிரிவுபசார விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டி.ஜி.பி. ராஜேந்திரன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு சால்வைகள் அணிவித்து வாழ்த்தி வழியனுப்பினர்.