சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு உள்ளது. இதனால் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை வருகிற 7 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் பொது மக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை (Grocery) உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகை கடை வியாபாரிகள் தங்களது வாகனங்கள் வழியாக நாளை முதல் தெருத்தெருவாக சென்று பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு (Tamil Nadu Government) அனுமதி அளித்துள்ளது.


ALSO READ | கோவிட் நிவாரணப் பொருட்களை தமிழக அரசுக்கு வழங்கிய Isha Foundation


அதன்படி பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகே உள்ள கடைகளுக்கு சென்று சீட்டு எழுதி கொடுத்து விட்டு வந்து விடலாம் அல்லது செல்போன் மூலமும் மளிகைப் பொருட்களை வாங்க தகவல் கொடுக்கலாம். இந்த பொருட்களை வீடுகளுக்கே சென்று கடைக்காரர்கள் வழங்குவதற்கும் அரசு அனுமதி கொடுத்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மளிகைப் பொருட்களை விநியோகிக்க நேரம் ஒதுக்கி உள்ளது.


கடைகளில் இருந்து பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்களை விநியோகிக்க மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் லைசென்ஸ் பெற்று கடை நடத்துபவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. எனவே சென்னை மாநகராட்சி பகுதிகளில் 7,500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாநகராட்சியில் லைசென்ஸ் பெற்று கடை நடத்தி வருகின்றனர். இந்த கடைக்காரர்களுக்கு மட்டும் இருசக்கர வாகனங்களில் சென்று பொருட்களை விற்பனை செய்ய மாநகராட்சியில் இருந்து இன்று டோக்கன்கள் வழங்கப்பட்டன.


டோக்கன் வாங்கிய கடைக்காரர்களின் தொலைபேசி எண்கள்  www.chennaicorporation.gov.in  என்ற மாநகராட்சியின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த கடைக்காரரின் கடை பெயர், அவரது பெயர், செல்போன், வாட்ஸ்-அப் நம்பர்கள் போன்ற முழு விவரங்களும் அந்த இணைய தளத்தில் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


பொதுமக்கள் தங்கள் ஏரியாவில் உள்ள கடைகளை தேர்ந்தெடுத்து தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் கடைக்காரர்கள் மளிகைப் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு வந்து தருவார்கள் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR