புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் : மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
![புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் : மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் : மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2024/11/08/448801-ration.jpg?itok=DDFZTuOr)
New Ration Card | புது ரேஷன் கார்டு விண்ணப்பித்து மாத கணக்கில் காத்துக் கொண்டிருப்பவர்கள், அந்த விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொள்வது எப்படி என பார்க்கலாம்.
New Ration Card Tamil | மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக மத்திய அரசு ரேஷன் கார்டு நிலை 2024ஐ வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நிரந்தரமாக வசிப்பவர்கள் அனைவரும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த பிறகு, மத்திய அரசின் இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்த்து விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்ளலாம். மத்திய அரசின் nfsa.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில், விண்ணப்பதாரர்கள் தங்கள் ரேஷன் கார்டு நிலையை மாநில வாரியாகவும் சரிபார்க்கலாம்.
ரேஷன் கார்டு ஏன் அவசியம்
ரேஷன் கார்டு என்பது நாட்டில் ஒரு குடிமகனிடம் இருக்கும் முக்கிய ஆவணமாகும். இந்த கார்டு வைத்திருப்பவர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று மானிய விலையில் உணவு தானியங்களை பெறலாம். மத்திய மாநில அரசுகளின் எந்தவொரு நலத்திட்டமாக இருந்தாலும் ரேஷன் கார்டு அடிப்படையிலேயே பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதனால் இதுவரை ரேஷன் கார்டு வாங்காதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளவும். ஏற்கனவே ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அரசின் பொது விநியோகத் திட்டத்தில் இருந்து அத்தியாவசியப் பொருட்களைப் மிக குறைந்த விலையில் பெறலாம். பிபிஎல் அல்லது எல்ஐஜி வகையைச் சேர்ந்த இந்தியாவின் அனைத்து குடும்பங்களும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
மேலும் படிக்க | Ration Card | தமிழக அரசின் ரேஷன் கார்டு இலவச முகாம்.. மக்களே நல்ல வாய்ப்பு..!
ரேஷன் கார்டு பெற தகுதிகள்
விண்ணப்பதாரர் இந்தியாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். பிபிஎல் அல்லது ஏபிஎல் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
ரேஷன் கார்டு பெற தேவையான ஆவணங்கள்
ஆதார் அட்டை, மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண், மின் கட்டணம் பில், முகவரி ஆதாரம், பான் கார்டு
ரேஷன் கார்டு ஸ்டேட்டஸை தெரிந்து கொள்வது எப்படி?
1. ரேஷன் கார்டுக்கு ஏற்கனவே விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களும் இப்போது ரேஷன் கார்டு நிலையை ஆன்லைனில் சரிபார்க்க அதிகாரப்பூர்வ NFSA இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
2. விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் புரொபைல் பக்கத்தை அடைந்தவுடன், விண்ணப்பதாரர் Citizen Corner-ல் உள்ள உங்கள் ரேஷன் கார்டு நிலையை அறியும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
3. விண்ணப்பதாரர் தனது ரேஷன் கார்டு எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை புதிய பக்கத்தில் உள்ளிட வேண்டும்.
4. அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட பிறகு, ரேஷன் கார்டு விவரங்களைப் பெறு விருப்பத்தை கிளிக் செய்யவும்.
5. உங்கள் மாநிலம், மாவட்டம் உள்ளிட்டவற்றை தேர்வு செய்த பிறகு உங்கள் ரேஷன் கார்டு நிலையை அறிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு குறித்து தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மிஸ் பண்ணாதீங்க மக்களே
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ