ஒசூரில் புத்தாண்டு கொண்டாட்டம்: ஆஞ்சநேயர் கோயிலில் கடலைக்காய் திருவிழா
ஒசூரில் புத்தாண்டை முன்னிட்டு பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் கோயிலில் கடலைக்காய் திருவிழா நடைபெற்றது. நாடு நலம்பெற வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் ஆஞ்சநேயர் மீது கடலைக்காய்களை வீசி பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.
ஓசூர் ராஜகணபதி நகர் பகுதியில் பழமையான ஸ்ரீவரசித்தி ஆஞ்சநேயர் சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பிறந்த தினத்தில் கடலைக்காய் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
அதேபோல இந்த 2023 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு இன்று ஸ்ரீராஜ கணபதி ஸ்ரீவரசித்தி ஆஞ்சநேயர் சுவாமி கோயில் 65ஆம் ஆண்டு கடலைக்காய் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி கோயில் காலை முதல் ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரங்கள், சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அப்போது ஆஞ்சநேயர் சுவாமி வெள்ளி காப்பில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மேலும் படிக்க | பிறந்தது ஆங்கில புத்தாண்டு - மக்கள் உற்சாக வரவேற்பு
அதனைத்தொடர்ந்து குவியலாக வைக்கப்பட்ட கடலைக்காய்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் நாடு நலம்பெற வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும், அனைத்து மக்களும் இன்புற்று வாழ வேண்டும் என வேண்டி ஆஞ்சநேயர் சுவாமி மீதும் கோயில் சன்னதி மீதும் கடலைக்காய்களை வீசி வழிபாடுகளை மேற்கொண்டனர்.
இந்த கடலைக்காய் திருவிழாவில் புத்தாண்டையொட்டி ஓசூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.
மேலும் படிக்க | சமஸ்கிருதத்துக்கு 199 கோடி தமிழுக்கு 12 கோடி - முத்தரசன் கண்டனம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ