நியூயார்க் நகரில் முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் ரூ.2,780 கோடியில் தமிழகத்தில் தொழில்துவங்க ஒப்பந்தம் கையெழுத்து!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நியூயார்க்: நியூயார்க் நகரில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ரூ.2,780 கோடியில் தொழில் தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. தனது அமெரிக்க பயணத்தில் தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈர்த்துள்ளார். தமிழகத்தில் தொழில் தொடங்க 16 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுள்ளது. 


தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்க்க 14 நாள் அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அமெரிக்கா நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, " தமிழகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்தார். 


மேலும், மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்ய தமிழகம் உகந்த மாநிலம் என்றும்,  தடையற்ற மின்சாரம், சிறந்த உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் திறன்மிக்க மனித வளம் தமிழகத்தில் உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். விவசாயம் சார்ந்த தொழில்கள், கால்நடை மற்றும் பால்வள தொழில்களை அரசு தொடர்ந்து ஊக்குவிக்கும் எனவும் குறிப்பிட்டார். 


இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.2,780 கோடியில் தமிழகத்தில் தொழில் தொடங்க 16 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த புதிய ஒப்பந்தம் மூலம், 20 ஆயிரத்துக்கும் அதிமான வேலைவாய்ப்புகள் உருவாகும், இதனால் இளைஞர்கள் பயனடைவார்கள். மேலும், Haldia Petrochemicals நிறுவனமும் தொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் கோடிக்கு கொள்கை அளவில் ஒப்பந்தம் செய்துள்ளது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.