கோயம்புத்தூர் மாவட்ட உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் கடந்த மாதம் 23ஆம் தேதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது. இதில் முபின் என்ற இளைஞர் உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்தில் சோதனை செய்ததில், 2 சிலிண்டர்கள் மற்றும் ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் என வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்க தொடங்கியது.  விசாரணையில், முபின் வீட்டிலிருந்து 75 கிலோ வெடிமருந்து மற்றும் ஐ.எஸ். இயக்கம் தொடர்பான குறிப்புகள் கைப்பற்றப்பட்டன. இந்தச் சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சதித்திட்டம் தீட்டியதாக உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன் (23), முகமது தல்கா (25), ஜி.எம். நகர் முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் (25) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். 


தொடர்ந்து கைது செய்யப்பட்ட 6 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடமும், அவர்களது வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில் முக்கிய ஆவணங்கள், பென் டிரைவ், பிரசார வீடியோக்கள் உள்பட பல ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் கோவையில் உள்ள 20 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் மீண்டும் சோதனை நடத்திவருகின்றனர். அதுமட்டுமின்றி  தமிழ்நாட்டில் 45 இடங்களிலும் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.  இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கருதப்படும் அத்தனை பேருக்கும் தொடர்புடைய இடங்களில் இச்சோதனை நடப்பதாக தெரிகிறது. இந்தச் சோதனையில் மேலும் பல ஆதாரங்கள் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



முன்னதாக, என்.ஐ.ஏ அதிகாரிகள் செய்த விசாரணையை அவர்கள் ஆடியோ மற்றும் வீடியோவாக பதிவு செய்துகொண்டனர். இதற்கிடையே சம்பவம் நடந்ததற்கு முன்னதாக முபின் தனது உடலில் உள்ள ரோமங்களை மழித்ததாகவும், அது தற்கொலை படையினர் செய்யும் செயல் என்றும் தகவல் பரவியது. இதனால் இந்தச் சம்பவம் தீவிரவாத கும்பலின் சதித்திட்டம்தான் என்று நம்பப்படுகிறது.


மேலும் படிக்க | தமிழ்நாட்டில் குறைந்தது மின் கட்டணம்... முழு விவரம்


கைது செய்யப்பட்ட 6 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அதேசமயம் இவ்வழக்கு என்.ஐ.ஏ வசம் இருப்பதால் சென்னை பூவிருந்தவல்லியில் இருக்கும் என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. அங்கு சிறப்பு அனுமதி பெற்று சில நாள்களுக்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் கைதான பேரிடமும் தீவிர விசாரணை நடத்திவிட்டு புழல் சிறையில் அடைத்தனர்.


இதனையடுத்து கடந்த 8ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை 22ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ