எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது - உதயநிதி ஸ்டாலின்!
சட்டமன்ற தேர்தலில் அடிமைகளை எல்லாம் அடித்து விரட்டினோமே அதே போல இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எஜமானர்களை அடித்து விரட்டுவோம் - வேலூரில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவில் அமைச்சர் உதயநிதி பேச்சு
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் திமுக வின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது, ஒரு கிளை செயலாளரை கூட தொட்டுப் பார்க்க முடியாத அளவுக்கு கலைஞர் நம்மை உருவாக்கியுள்ளார். அதன்படியே தற்போதைய தலைவரும் செயல்பட்டு வருகிறார். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்டம் தோறும் மாரத்தான் போட்டி, பேச்சு போட்டி நடத்த இளைஞர் அணி முடிவு செய்துள்ளது. இளைஞரணியின் மாநில மாநாடு வரும் டிசம்பர் 17 ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் இந்தியாவிலேயே மிகப்பெரிய திட்டம். சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாவட்டத்தை மிகச் சிறப்பாக, இதுவரை நடக்காத மாநாடாக நடத்திக் காட்டுவோம். அந்த மாநாட்டின் வெற்றி என்பது எப்படி சட்டமன்ற தேர்தலில் எப்படி அடிமைகளை எல்லாம் அடித்து விரட்டினோமோ அதே போல இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எஜமானர்களை அடித்து விரட்டுவோம் என பேசினார்.
மேலும் படிக்க | மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த முற்போக்கு சிந்தனையாளர் தந்தை பெரியார்!
மேலும், இவ்விழாவில் திமுக பொருளாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர் பாலு பேசுகையில் எத்தனையோ சொல்லியாச்சு இந்தியா கூட்டணியினரே பேசுகின்றனர் உதயநிதி பேச்சுக்கு காரணம் அவர்களுக்கு ஒன்று தெரியவில்லை, பொறாமை உணர்ச்சியோடு இந்தியா கூட்டணியினர் செயல்படுகின்றனர். ஆகையால் ஒவ்வொரு அடியையும் நாம் தம்பி உதய நிதி கவணமாக எடுத்து வைத்து பேச வேண்டும். காரணம் நான் தூக்கி வளர்த்த குழந்தை என்பதால் கூறுகிறேன் அன்புதலைவர் ஸ்டாலினின் ஆட்சியில் செங்கோட்டையில் நடக்க வேண்டுமென பேசினார். பின்னர் இவ்விழாவில் தமிழக நீர் வளத்துறை அமைச்சரும் கட்சியின் பொதுசெயலாளருமான அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் என்னை பொருத்த வரையில் தேர்தல் சட்டமன்றம் பாராளுமன்றம் சேர்ந்து வந்தாலும் சரி பஞ்சாயத்துக்களை கலைத்து தேர்தலை நடத்தினாலும் சரி எத்தனை பட்டாளத்தை கூட்டி வந்தாலும் திமுக காரன் அஞ்சமாட்டான் போராட கூடியவன் திமுக காரன் திமுகவோடு மோதும் கட்சிகளுக்கு எச்சரிக்கையை ஒரு முறைக்கு இரு முறை எச்சரிக்கிறேன் என பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய முக ஸ்டாலின், பல்வேறு சிறப்புகளை கொண்ட, வீரம் விளைந்த வேலூரில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெறுகிறது. நானும், துரைமுருகனும் கருணாநிதியால் வார்க்கப்பட்டவர்கள். முக்கிய பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் என்னை வழிநடத்துபவர் துரைமுருகன். விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தவர்களுக்கு பாராட்டுகள். கொட்டும் மழையில் பிறந்ததால்தான் திமுக வேகமாக வளர்ந்து வருகிறது. திமுகவை வாழ வைத்துக் கொண்டிருப்பது தொண்டர்கள்தான். திமுகவின் வளர்ச்சிக்கு தொண்டர்கள்தான் காரணம். தொண்டர்களால் உருவாக்கப்பட்டவன் நான். ஒரு குடும்பத்தின் தாய், தந்தையை போன்றவர்கள்தான் கட்சியின் முன்னோடிகள். 2 கோடி கொள்கை வாதிகள் நிறைந்ததுதான் திமுக. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தை தலைச்சிறந்த மாநிலமாக உருவாக்கி வருகிறோம். நாம் மிகமிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம் இந்திய ஜனநாயகத்தை காக்கும் போர்களத்திலிருந்து பவள விழாவை நடத்துகிறோம் காவல் அரணாக திமுக செயல்பட்டுகொண்டிருக்கிறது மாநில அரசை நடத்த தேவையானது நிதி ஆதாரம் ஆனால் ஜி.எஸ்டியை கொண்டு வந்து மாநில அரசின் நிதி ஆதாரத்தை மத்திய அரசு கபளிகரம் செய்துள்ளது கல்வி சுகாதாரம் ஆகியவைகளை செய்து தர நிதி வேண்டும் ஆனால் அதை எல்லாம் மத்திய அரசு செய்ய தடுக்கும் வகையில் ஜி.எஸ்டியை கொண்டு வந்தது அதன் வரி வருவாயையும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பிரித்து தருவதில்லை என்று பேசினார்.
மேலும் படிக்க | 2026-ல் தமிழ்நாட்டில் பாஜக தான் ஆட்சி அமைக்கும் - அண்ணாமலை சவால்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ