சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு (Coronavirus) நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து  மாவட்டங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே, மத்திய அரசிடம்,  தமிழக அரசு சார்பில் 20 லட்சம் தடுப்பூசிகள் கேட்கப்பட்டது. அதன் படி கடந்த 18ம் தேதி ஐதராபாத்தில் இருந்து 1 லட்சம்  தடுப்பூசிகளும், இன்று புனேவில் இருந்து 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், தடுப்பூசிகளை (Vaccination) பார்வையிட்ட பின் செய்தியாளர்களை பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் (Vijayabaskar), தமிழகத்தில் தற்போது 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. குளிர்சாதன வாகனம் மூலம் டி.எம்.எஸ்.வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும். 


ALSO READ | தடுப்பூசி பற்றாக்குறை! புனேவில் இருந்து 6 லட்சம் டோஸ் தமிழகம் வருகை!


தமிழகத்தில் தடையின்றி மக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசிகள் வீணாவதை தடுக்க போதிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மே-1ம் தேதிக்கு பின்னர் 18  வயது நிரம்பியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) செலுத்துவதன்மூலம் தடுப்பூசிகள் வீணாவது தடுக்கப்படும். தமிழகத்திற்கு இதுவரை கோவிஷீல்டு தடுப்பூசி 47 லட்சத்து 3 ஆயிரத்து 590 வந்துள்ளது. கோவாக்சின் 8 லட்சத்து 82 ஆயிரத்து 130 வந்துள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்பது இல்லை. நாளொன்றுக்கு 240 டன் ஆக்ஸிஜன்  வழங்கும் வகையில் வலுவான கட்டமைப்பு உள்ளது. தமிழ்நாட்டில் 34,000 படுக்கை வசதிகளும், சென்னையில் 10,000 படுக்கை  வசதிகளும் உள்ளன என்று கூறினார்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR