கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது... மாறிவரும் சுற்றுச்சூழலில் கோடையில் வெப்ப அளவு அதிகரித்துள்ளதால், மாணவர்களுக்கு வெப்பம் சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதா. எனவை மாணவர்களுக்கு கட்டாயம் ஓய்வு அளித்திட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் கோடை விடுமுறை என்பது மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று உறவினர்களுடன் பழகுவதற்கும், உறவுகளின் அவசியத்தை தெரிந்து கொள்ளவும் ஒரு நல்வாய்ப்பு, எனவே மாணவர்களின் விடுமுறையில் அவர்களை அலைகழிப்பது நல்லது அல்ல எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


எச்சரிக்கையினை மீறி கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கோடை விடுமுறையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக பெற்றோர்களிடமிருந்து பள்ளிகள் மீது புகார் வந்தால் அதன் மீது எந்தவித காலதாமதமின்றி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.