செஞ்சி திமுக MLA KS மஸ்தான் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4-வது திமுக MLA என அறியப்படுகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை குரோம்பேட்டில் உள்ள டாக்டர் ரெலா மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


READ | பாதுகாவலர்கள் ஒடுக்கு முறையாளர்களாக மாறுவது கொடூரமான குற்றம்: நீதி வேண்டும் ராகுல்...


தகவல்கள் படி சனிக்கிழமை அவருக்கு தொண்டை எரிச்சல் ஏற்பட்டது எனவும், தொடர்ந்து செஞ்சி அரசு மருத்துவர்களை அனுகி தனக்கு கொரோனா சோதனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது. சோதனையின் மூலம் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது, இதைத்தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக குரோம்பேட்டில் உள்ள டாக்டர் ரெலா மருத்துவ நிறுவனத்தை அடைந்து அவர் அங்கு கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
 
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியத்தை சேர்ந்த திமுக MLA-க்கள் கே கார்த்திகேயன் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் சேயூரைச் சேர்ந்த RT அரசு ஆகியோர் COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்ட மற்ற இரண்டு திமுக MLA-க்கள் ஆவர். இவர்கள் இருவரும் தற்போது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


READ | போலீஸ் காவலில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு DMK சார்பில் 25 லட்சம் நிதியுதவி!!


இந்த மாத தொடக்கத்தில், சேப்பாக்கம்- திருவள்ளிகேனி MLA J அன்பழகன் அவர்களு முன்னதாக கொரோனா நோய் தொற்று காரணமாக உயிர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தவிர, ஸ்ரீபெரம்புதூரைச் சேர்ந்த அதிமுக MLA கே பழனியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.