கரூரை சேர்ந்தவர் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் செந்தில்பாலாஜி, அதிமுகவில் இருந்து பிரிந்த டி.டி.வி.தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் இணைந்தார். தற்போது இன்று (டிசம்பர் 14) தனது தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்துக்கு வந்த செந்தில்பாலாஜி, தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்தில்பாலாஜி கூறியதாவது, 


மு.க ஸ்டாலினை சிறந்த தலைவராக பார்க்கிறேன். தொண்டர்களின் ஆதரவையும், அரவணைப்பையும் பெற்றவராக மு.க ஸ்டாலின் இருக்கிறார். எனது தொண்டர்களின் விருப்படி, இன்று திமுகவில் என்னை இணைத்துக்கொண்டேன். நான் திமுகவில் இணைந்தது டிடிவி தினகரனுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கலாம். அவர் (டிடிவி தினகரன்) என்மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. அது மரபும் கிடையாது. 


மக்கள் நலனுக்கு எதிராக மக்கள் விரோத ஆட்சியை நடத்துகின்றன ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ். மத்திய அரசிடம் தமிழகத்தின் உரிமைகளை விட்டுகொடுக்கிறது எடப்பாடி அரசு. மத்திய அரசை வலிமையாக எதிர்க்க கூடிய தலைவர் மு.க ஸ்டாலின் மட்டுமே. அவர் தலைமையில் அதிமுக ஆட்சி அகற்றி, அடுத்த முதல் அமைச்சராக மு.க ஸ்டாலினை அமர செய்வோம்" எனக் கூறினார்.